Published : 29 Apr 2020 04:42 PM
Last Updated : 29 Apr 2020 04:42 PM
சினிமா மற்றும் நாடக உலகத்துக்கு ஒரு இழப்பு என்று இர்ஃபான் கான் மறைவு குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இதனிடையே, இன்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது இர்ஃபான் கான் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"இர்ஃபான் கானின் மரணம், சினிமா மற்றும் நாடக உலகத்துக்கு ஒரு இழப்பு. பல்வேறு தளங்களில் அவரது பன்முக நடிப்புக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பம், நண்பர்கள், ரசிகர்களுக்கு என் ஆறுதல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Irrfan Khan’s demise is a loss to the world of cinema and theatre. He will be remembered for his versatile performances across different mediums. My thoughts are with his family, friends and admirers. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) April 29, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT