Published : 12 Apr 2020 10:23 AM
Last Updated : 12 Apr 2020 10:23 AM
மனித வரலாற்றின் சிறந்த கண்டுபிடிப்பு ஸ்மார்ட்போன்கள்தான் என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
இது குறித்து தனது இணையதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மனித வரலாற்றின் சிறந்த கண்டுபிடிப்பு என்று சக்கரத்தை சொல்வார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் தான் என்று நான் சொல்வேன். ஏனெனில் ஸ்மார்ட்போன்களால் தான் தற்போது உலகத்தில் உள்ள அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லையென்றால் நாம் இப்போது என்ன செய்துகொண்டிருப்போம்.
கைவிரல்களால் சுழற்றி டயல் செய்யக்கூடிய போன்கள் தான் அக்காலத்தில் மிகப்பெரிய வசதி. வீட்டில் லேண்ட்லைன் போன்கள் வைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாக இருந்தது. அதை வாங்குவதே எங்களுக்கு மிகக் கடினமாக இருந்தது,. பல ஆண்டுகள் நாங்கள் அந்த வசதியை அனுபவிக்க முடியவில்லை.
என் அப்பா கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பிஎச்.டி படித்துக் கொண்டிருக்கும்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை போன் செய்வார். எந்த நாளில் எந்த நேரத்தில் போன் செய்யப்போகிறார் என்பதை கடிதத்தில் குறிப்பிட்டு விடுவார். இங்கிலாந்தில் இருந்து இங்கு கடிதம் வருவதற்கே 7 முதல் 10 நாட்களாகி விடும்.
ஆனால் இப்போது அனைத்துமே நம் கட்டுப்பாட்டில் உள்ளன. காலம் மாறுகிறது. அப்படி மாறும்போது இந்த தலைமுறை ஆரம்ப காலத்தை பற்றிய பல விஷயங்களை புரிந்து கொள்ள தவறுகிறார்கள். எங்களுக்கு முந்தைய தலைமுறையை நாங்கள் எப்படி புரிந்துகொள்ளவில்லையோ அதே போல இந்த தலைமுறையும் புரிந்துகொள்ளப்போவதில்லை.
இவ்வாறு அமிதாப் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT