Published : 09 Feb 2020 04:16 PM
Last Updated : 09 Feb 2020 04:16 PM
இன்னும்கூட நல்லபடங்களை தேர்ந்தெடுக்கும் உயரத்தில்தான் ஸ்ரீதேவி இருந்தார்; ஆனால் ஏனோ அதை செய்யவில்லை என்று பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்துக்காக ஸ்ரீதேவியின் வாழ்க்கைவரலாறு நூலை எழுதியுள்ள சத்யார்த் நாயக் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மும்பையில் எழுத்தாளர் சத்யார்த் நாயக் எழுதிய ''தி எடர்னல் ஸ்கிரீன் காடஸ்'' நூல் வெளியிடப்பட்டது. பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள இந்நூல் ஆசிரியருடன் ஒரு நேர்காணலை ஐஏஎன்எஸ் நடத்தியது. அவற்றிலிருந்து சில முக்கியப் பகுதிகள்:
'Sridevi: The Eternal Screen Goddess' நூலாசிரியர் சத்யார்த் நாயக்
நீங்கள் புத்தகம் எழுதுவதை ஸ்ரீதேவி விரும்பினாரா?
எனக்குப் பிடித்த திரைக்கலைஞர் ஸ்ரீதேவி பற்றி நல்ல புத்தகம் இல்லையே என்று கவலைப்பட்டேன். அதுதான் அசல் திட்டம். 2017 ஆம் ஆண்டில், பென்குயின் ரேண்டம் ஹவுஸ் அனுமதி கிடைத்தது, போனி (கபூர்) சார் மற்றும் ஸ்ரீதேவி ஜி ஆகியோருடன் எனக்கு இதுகுறித்து பேசினேன். சினிமாவில் (மகள்) ஜான்வியின் அறிமுகம் ஆகப்போவது குறித்த விஷயங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. தடக் வெளியானபிறகு நாம் புத்தகம் குறித்து ரிலாக்ஸாக பேசலாம் என்றார். ஆனால் அது நடக்கவில்லை. அவர் 2018 பிப்ரவரி 24 ல் அவரது மரணம் நிகழ்ந்தது.
இதனால் நான் சிதைந்துபோனேன். நான் உணர்ச்சிரீதியாக உடைந்துவிட்டேன், ஸ்ரீதேவியின் மரணம் என்னை மிகவும் பாதித்ததால் இனி என்னால் புத்தகம் எழுத முடியாது என்று நானே சொல்லிவிட்டேன். நான் ஸ்ரீதேவியுடன் பேசி அவரைப் பற்றி பல விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்பினேன். இதற்காகவே என் மனதில் கேள்விகளின் பட்டியல் இருந்தது, ஆனால் இப்போது இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லை.
ஆனால் இந்த அதிர்ச்சியான சம்பவத்துக்குப் பிறகு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் பென்குயின் பதிப்பகத்தாரும் இப்பணியை செய்துமுடிக்க என்னை ஊக்குவித்தனர், இந்நூலுக்காக ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 70 நடிகர்களை நேர்காணல் செய்து அவர்களிடமிருந்து விஷயங்களைப் பெற்றேன்.
ஸ்ரீதேவியிடம் நாயக் கேட்க விரும்பிய கேள்விகள் என்ன?
ஸ்ரீதேவி ஒரு திறமைவாய்ந்த கலைஞர் என்ற முறையில் தொண்ணூறுகளில் அவர் சில திரைப்படங்களை தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம். அவருடைய சில நேர்காணல்களில் அவர் தனது பாத்திரங்களைத் தேர்வு செய்யவில்லை என்று சொன்னார் என்பதும் எனக்குத் தெரியும். எனினும்
அந்த நேரத்தில் அவர்கள் ஏன் கலாபூர்வமான சினிமாக்களைத் தந்த திரைப்பட இயக்குநர்களுடன் அவர் இணைந்து பணியாற்றவில்லை என்ற கேள்வியை அவரிடம் கேட்க விரும்பினேன். கோவிந்த் நிஹலானி மற்றும் ஷியாம் பெனகல் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தால் ஸ்ரீதேவியின் வித்தியாசமான பக்கத்தை நாம் பார்த்திருக்க முடியும்,
அவரது படங்களில் உங்களுக்கு பிடித்தது?
ஸ்ரீதேவியின் பெரும்பாலான ரசிகர்களைப் போலவே, எனக்கும் கூட 'சோல்வா சவான்', 'மிஸ்டர் இந்தியா', 'சத்மா', 'சாந்தினி' ,'நாகினா' மற்றும் 'ஹிம்மத்வாலா' போன்ற படங்கள் மிகவும் பிடிக்கும்.
சரி வேறு என்னவிதமான படங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை?
''ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' போன்ற படத்தில் அவர் ஏன் நடித்தார் என்று நான் கேட்க விரும்பினேன். என்னைப் போன்ற ஒரு நபர், அவரை ஒரு நடிகையாகப் பாராட்டியவர் ஆச்சரியப்படுவார், ஆனால் என் புத்தகத்தின் எஞ்சிய பகுதியில், நான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளேன்.
மற்ற சராசரி ரசிகர்களைப் போலவே, ஸ்ரீதேவியின் அழகிய புன்னகை, நடனத் திறன் மற்றும் திரையில் தோன்றியவிதம் என்று நானும் நினைப்பதாக கருதுவது எளிது. ஆனால் நான் ஸ்ரீதேவியை போற்றுவதற்கு அவற்றையெல்லாம் தாண்டி பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது அதை பேசுவது சுலபமானது. காரணம் 80கள் 90களில் திரைப்பட உலகில் ஆணாதிக்கம் உச்சத்தில் இருந்த நேரம்.
அப்போதெல்லாம் நடிகைகளுக்கு சம்பளம் குறைவு. அத்தகைய நேரங்களில் இவற்றையெல்லாம் கடந்து தனது இருப்பை மிகவும் வெற்றிகரமான கதாநாயகிகளில் ஒருவராக அவர் எப்படி உயர்ந்து நின்றார் என்பது மிகவும் வியப்பாக இருந்தது. அக்கால கட்டத்தின் பொதுவான நடைமுறைகளைத் தாண்டி அதாவது அடிப்படை இருப்பு என்பதைத் தாண்டி அவர் கணிசமான பகுதிகளை வென்றார். அவர் சிற்சில நல்ல படங்களில் நடித்துள்ளார். என்றாலும் அப்போது இன்னும் விரும்பிய படங்களைத் தேர்ந்தெடுக்கும் உயரத்தில் அவர் இருந்தார்; ஆனால் ஏனோ செய்யவில்லை என்பது எனது வருத்தம்.
ரஜினிகாந்த் மற்றும் சன்னி தியோல் ஆகிய இரண்டு பெரிய ஹீரோக்ககள் நடித்த கால்பாஸ் திரைப்படத்தின் போஸ்டரிலேயே ஸ்ரீதேவியின் படம்தான் மிகப்பெரியதாக இருக்கும். அவர்கள் ரஜினிகாந்த், சன்னிதியோல் இருவரது படங்களும் ஒரு துணை நடிகருக்கான தோற்றத்தில்தான் இடம்பெற்றிருக்கும்.
50, 60களில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் இருந்த ஒரு காலகட்டத்தை ஸ்ரீதேவி பாலிவுட்டில் மீண்டும் கொண்டுவந்தார் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. இதில் மிகவும் ஆச்சரியமானது, அவர் வணிக மாசலாத்தனங்களுக்கும் பொருந்தியுள்ளார் என்பதுதான். என்றாலும் அனைத்துவகைகளிலும் அவர் ஒரு லேடி சூப்பர்ஸ்டார் என்பதை மறுக்கமுடியாது.
இவ்வாறு அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT