Published : 30 Dec 2019 05:18 PM
Last Updated : 30 Dec 2019 05:18 PM

தொடர் தோல்விகள்: வெப் சீரிஸ் இயக்கும் ராம் கோபால் வர்மா

தொடர் திரைப்படத் தோல்விகளுக்குப் பின் இயக்குநர் ராம் கோபால் வர்மா வெப் சீரிஸ் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

90களில் 'ஷிவா', 'சத்யா', 'கம்பெனி' உள்ளிட்ட, மும்பை நிழலுலகத்தை பற்றிய, தாவூத் இப்ராஹிமைப் பற்றிய திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் ராம் கோபால் வர்மா. ஆனால் கடந்த பத்து வருடங்களில் ’சர்கார்’ பட வரிசையைத் தவிர இவரது எந்தப் படமும் இவருக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை. சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகள், அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் ராம் கோபால் வர்மா இருந்து வருகிறார்.

வருடத்துக்குக் குறைந்தது இரண்டு படங்களை இயக்கி, வெளியிட்டு, அதன் மோசமான விமர்சனங்கள் மூலமும் இன்னமும் பேசப்பட்டு வருகிறார். ’ரங்கீலா’ படப் பாணியில் ’பியூட்டிஃபில்’ என்ற படத்தை இயக்கி அது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

தற்போது, தாவூத் இப்ராஹிமின் வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெப் சீரிஸை இயக்கப்போவதாக ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களாக இது பற்றிய நிறையத் தகவல்களைத் தான் சேகரித்து வைத்துள்ளதாகவும், அதைத் திரையில் கொண்டு வர வெப் சீரிஸே சிறந்த தளமாக இருக்கும் என்றும் வர்மா கூறியுள்ளார்.

நிஜவுலக ஆளுமைகளை வைத்து ராம் கோபால் திரைப்படம் எடுப்பது முதல் முறையல்ல. ’வீரப்பன்’, ’லக்‌ஷ்மி’ஸ் என்.டி.ஆர்’, ’வங்காவீட்டி’ உள்ளிட்ட படங்களை ஏற்கனவே எடுத்துள்ளார். அவை எப்பவும் போல ராம் கோபால் வர்மாவுக்கு தோல்விப்படங்களாகவே அமைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x