Published : 25 Nov 2019 06:24 PM
Last Updated : 25 Nov 2019 06:24 PM
பாலிவுட் நடிகை கங்கணா ரணவத் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதில் முதல் படம் அயோத்தியில் ராமர் கோயில் வழக்கு பற்றியது.
பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து செய்திகளில் வலம் வரும் ஒரு பிரபலம் நடிகை கங்கணா ரணவத். தற்போது இவர் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதில் முதல் படத்துக்கு அபராஜிதா அயோத்யா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த அயோத்தியா ராமர் கோயில் வழக்கு பற்றிய படம் இது.
அடுத்த வருடம் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
இந்தப் படம் பற்றி பேசிய கங்கணா, "பல நூறு வருடங்களாக ராமர் கோயில் பற்றிப் பேசி வருகின்றனர். 80களில் பிறந்த ஒரு குழந்தையாக, தொடர்ந்து அயோத்தியா என்ற பெயரை நான் எதிர்மறையான தன்மையில் தான் கேட்டு வருகிறேன். ஒரு அரசன் பிறந்த ஒரு நிலப்பகுதி. அவன் தியாகங்களின் மறுவடிவமாக இருந்தவன். சொத்துப் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான். இந்த வழக்கு இந்திய அரசியலின் அடையாளத்தை மாற்றிவிட்டது. இந்த தீர்ப்பு பல நூறு வருடச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதே நேரத்தில் இந்தியாவின் சமத்துவ ஆன்மாவையும் காத்துள்ளது.
'அபாரஜிதா அயோத்தியா' படம், நாயகன் எப்படி கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதிலிருந்து கடவுள் நம்பிக்கை பெறுகிறான் என்ற பயணமே. ஒரு வகையில் இது என் தனிப்பட்ட பயணத்தின் பிரதிபலிப்பும் கூட. எனது முதல் தயாரிப்புக்கு இது சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT