Published : 19 Aug 2019 02:08 PM
Last Updated : 19 Aug 2019 02:08 PM

'தன்பாலின உறவாளர்’ என்று கலாய்க்க நினைத்த ட்வீட்: பதிலடி கொடுத்த கரண் ஜோஹர்

தனது பாலியல் விருப்பம் குறித்து கிண்டல் செய்ய நினைத்த நபரின் வாயை அடைக்கும் அளவுக்கு பதில் கிண்டல் செய்துள்ளார் கரண் ஜோஹர்.

பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹரின் பாலியல் விருப்பம் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வரும். நேரடியாக அவரைக் குறிப்பிட்டு கிண்டல் செய்பவர்களும் உண்டு. 2017-ல் தனது வாழ்க்கைக் கதையை புத்தகமாக வெளியிட்ட கரண் ஜோஹர், அதில் தான் ஒரு தன் பாலின உறவாளர் தான் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.


நீக்கப்பட்ட ட்வீட்

தற்போது திரைப்பட விமர்சகர் ராஜீவ் மசந்த், கரண் ஜோஹர் கலந்துகொண்ட ஒரு பேட்டி குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஒரு பயனர், கரண் ஜோஹர் பற்றிப் படம் எடுத்தால் அந்தப் படத்துக்கு கரண் ஜோஹார்: தி கே (the gay) என்று பெயர் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு உடனடியாக கரண், "அசலாக யோசிக்கும் மேதாவி நீங்கள். இவ்வளவு நாள் எங்கு மறைந்து கொண்டிருந்தீர்கள்? நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி. ட்விட்டரில் இன்று மிகவும் ஆக்கத்திறனுடைய குரலாக மாறியதற்கு நன்றி" என்று உடனடியாக நக்கலுடன் பதில் சொன்னார். கரணின் பதிவுக்குப் பிறகு தனது ட்விட்டை நீக்கிவிட்டார் அந்தப் பயனர்.

கரண் ஜோஹரின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்து, இது போன்றவர்களுகெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து பதில் சொல்ல வேண்டாம் என அவரிடம் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x