Published : 04 Mar 2015 05:10 PM
Last Updated : 04 Mar 2015 05:10 PM

சீக்கியர்களுக்கு எதிரான கருத்து: ராம்கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு

சர்ச்சையான கருத்துகளை தொடர்ந்து சொல்லி வருபவர் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. தற்போது சீக்கியர்களுக்கு எதிராக கருத்து சொன்னதற்காக, ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குர்மீட் ராம் ரஹீம் சிங் என்பவர் மெசஞ்சர் ஆஃப் காட் எனப்படும் கடவுளின் தூதர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராம் ரஹீம் சிங் குறித்து ராம் கோபால் வர்மா சர்ச்சையாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட ராம் ரஹீம் சிங் ஆதரவாளார்கள் பஞ்சாப் மாநிலம் லூதியானா காவல் நிலையத்தில் ராம்கோபால் வர்மா மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து, மத ரீதியாக பிறர் மனதை புண்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் மூலம் ராம் ரஹீம் சிங் சமூக சேவைகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் வெளியிட்ட சர்ச்சை கருத்துகள்:



x