Published : 15 Jun 2017 05:38 PM
Last Updated : 15 Jun 2017 05:38 PM
அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலமாக சூப்ரா ஷெட்டியுடன் காதல் வயப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்தி திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
ஆர்த்தி பஜாஜ் என்பவரை திருமணம் செய்து, 2009-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பிறகு நடிகை கல்கியை திருமணம் செய்தவர் 2011-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.
அதனைத் தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சூப்ரா ஷெட்டியை காதலித்து வருவதாகவும், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சூப்ரா ஷெட்டியுடன் இருக்கும் காதலை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இருவருமே தங்களுடைய காதலை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT