Published : 08 Jun 2017 03:25 PM
Last Updated : 08 Jun 2017 03:25 PM

நீச்சல் உடை புகைப்படத்தை பதிவேற்றிய நடிகைக்கு கடும் எதிர்ப்பு

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய தங்கல் திரைப்பட புகழ் நடிகை பாத்திமா சானா ஷேக்கிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்ணான பாத்திமா ரமலான் மாதத்தில் இப்படி ஒரு புகைப்படத்தை பதிவேற்றியது தவறு என்று சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது பாத்திமாவின் தனிப்பட்ட சுதந்திரம் என்று அவருக்கு ஆதரவான கருத்துக்களும் பகிரப்படுகின்றன.

அமீர்கான் நடிப்பில் குஸ்தி வீராங்கனைகளை மையமாக வைத்து வெளியான படம் தங்கல். இதில் அமீர் கானின் இளையமகளாக (வளர்ந்த பிறகு) நடித்த நடிகை பாத்திமா சானா ஷேக் இந்த படத்துக்குப் பிறகு இவருக்கு பெரிய வரவேற்பு காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றியுள்ள பாத்திமா தான் நீச்சல் உடையில் கடற்கரை ஒன்றில் ஓய்வு எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம் பெண்ணான பாத்திமா ரமலான் மாதத்தில் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x