Published : 29 Mar 2017 03:57 PM
Last Updated : 29 Mar 2017 03:57 PM

ஹாஃப் - கேர்ள்பிரண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

அர்ஜூன் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் நடிப்பில், மோகித் சூரியின் இயக்கத்தில் 'ஹாஃப் - கேர்ள்பிரண்ட்' படத்தில் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ஜூன், ''நன்றாகத் தொடங்கப்பட்டுள்ள ஒரு பயணம் பாதி முடிந்திருக்கிறது. என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் 'ஹாஃப் - கேர்ள்பிரண்ட்'. படம் வெளியாகும் 19 மே வரை என்னால் பொருத்திருக்க முடியாது'' என்று கூறியுள்ளார்.

ஷ்ரதாவின் ட்விட்டர் பக்கத்தில், ''தோழியைக் காட்டிலும் அதிகம்; காதலியை விடக் குறைவு. இதோ போஸ்டர் உங்கள் பார்வைக்கு!'' என்று பதிவிடப்பட்டுள்ளது.

2014-ல் வெளியான சேத்தன் பகத்தின் 'ஹாஃப்- கேர்ள்பிரண்ட்' நாவலைத் தழுவி அதே பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

'ஹாஃப்- கேர்ள்பிரண்ட்' படம் மே 19-ம் தேதி வெளியாகிறது.

படத்தின் தயாரிப்பாளர்களில் சேத்தன் பகத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x