Published : 28 Apr 2017 11:11 AM
Last Updated : 28 Apr 2017 11:11 AM

வினோத் கன்னா இறுதிச் சடங்கை புறக்கணித்த பாலிவுட் நட்சத்திரங்கள்: வசைபாடிய ரிஷிகபூர்

பிரபல பாலிவுட் நடிகரும் மக்களவை எம்.பி.யுமான வினோத் கன்னா, உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.

இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவில்லை. இதனைக் குறிப்பிட்டு இளம் நட்சத்திர நடிகர்களை சரமாரியாக வசைபாடியிருக்கிறார் மூத்த நடிகர் ரிஷிகபூர்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெட்கக்கேடு. இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு நடிகரும் வினோத் கன்னாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அந்த இளம் நடிகர்களுடன் அவர் நடித்திருக்கிறார். மரியாதையுடன் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏன் இப்படிச் செய்தீர்கள்? இந்த நிகழ்ச்சி எனது மரணத்தை எதிர்கொள்ள என்னைத் தயார்படுத்தியிருக்கிறது. எனது மரணத்துக்குப் பின் யாரும் தோள் கொடுக்கமாட்டார்கள் எனத் தெரிந்துகொண்டேன். நாங்கள் நட்சத்திரங்கள் என பெருமைபேசிக் கொள்ளும் இன்றைய தலைமுறை நட்சத்திரங்களைப் பார்த்து கோபம் கொள்கிறேன். எனது மனைவியும் மகன் ரன்பீரும் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அதைக் காரணம் கூறி வராமல் இருப்பதுகூட ஏற்புடையதல்ல.

நேற்றிரவு பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சியில் நிறைய பேர் கலந்து கொண்டனர். ஆனால், வினோத் கன்னாவின் இறுதிச் சடங்கில் மிகக்குறைவானவர்களே கலந்து கொண்டனர். வினோத் கன்னா இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்காத அனைவரின் மீதும் எனக்குக் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x