Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM
இந்திய சினிமா தன் நூற்றாண்டைக் கொண்டாடி வரும் இந்தாண்டில் பாலிவுட்டில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. இந்தி சினிமா தன் வழக்கமான வரையறைகளைத் தாண்டி வந்திருக்கிறது. இதுவரை இந்தி சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு நடுத்தரக் குடும்பப் பெண்ணின் குரலை லஞ்ச் பாக்ஸ் படம் வெளிப்படுத்தியது. இன்றைய இளைஞர்களின் உலகத்தை சிக்ஸிடீன் படம் சித்தரிக்கிறது. ஒரு நவீனச் சிறுகதைத் தொகுப்பைப் போல நான்கு குறும்படங்களின் தொகுப்பாக வந்த பாம்பே டாக்கீஸ் சினிமா ஆர்வலர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப் பெற்றது.
இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனர்களான அனுராக் காஸ்யப், கரன் ஜோஹர், திபாகர் பானர்ஜி, சோயா அக்தர் ஆகியோர் இப்படத்தின் இயக்குனர்கள் ஆவர். ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் சஞ்சய் லீலா பான்சாலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த ராம் லீலா அதன் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காவில்லை. தமிழ் நடிகரான தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘ராஞ்சனா’, ஏக் துஜே கேலியே போல் வரலாறு ஆனது. அந்த வெற்றியால் தனுஷ் இந்தி சினிமாவின் விரும்பப்படும் நடிகர் ஆகியுள்ளார். அமிதாப் பச்சனின் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இயக்கம் பால்கி.
லஞ்ச் பாக்ஸ், பாம்பே டாக்கீஸ், ஷிப் ஆப் தீஷியஸ் போன்ற மாற்று முயற்சிகள் ஒருப்பக்கம் சினிமாவை ஆழத்தை நோக்கி இழத்துச் சென்றுள்ளன. ஆனால் மறுபக்கம் ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்கள் வெகுஜன ரசனையை அள்ளிச் சென்றுள்ளன. காதலும் நகைச்சுவையும் கலந்துவந்த ரன்பீர் கபூரின் யே ஜவானி ஹை தீவானி கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலுடன் வெற்றிவாகை சூடியிருக்கிறது.
காதல், திருமணம் போன்ற விஷயங்களில் இன்றைய இளம்தலைமுறைக்கு உள்ள மனச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் படமான ஸுத்தா தேசி ரோமான்ஸ் வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. பாக் மில்கா பாக்வின் வெற்றி இளைஞர்களை உற்சாகப்படுத்தியது.
அமெரிக்க எழுத்தாளரான ஹென்றியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த லொட்டோரா 1950களில் இருந்த இந்தியாவுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் சென்றது. சஞ்சய் லீ பான்சாலியின் ப்ளாக் படத்தின் திரைகதை எழுத்தாளர்களின் ஒருவரான பவானி ஐயர் இதன் திரைக்கதையை அமைத்திருந்தார். இதற்கிடையில் அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையிலான ஸ்பெசல் 26, விஷ்வரூப், மெட்ராஸ் கஃபே போன்ற படங்கள் வணிக நோக்கத்துடன் வெளிவந்து சர்ச்சைகளிலும் சிக்கின.
தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததைப் போல முக்கிய நடிகர்கள், நட்சத்திர இயக்குனர்கள் போன்ற பெரிய கவனமில்லாமல் வந்த சில படங்களும் மிகப் பெரும் வெற்றியைப்பெற்று வணிக வெற்றிப் பட்டியலில் ஒன்றாக ஆயின. இந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த தூம் 3, கிரிஷ் 3 ஆகிய படங்களும் வெற்றிப் பட்டியலில் இணைந்துள்ளன. ஏபிசிடி (எனிபடி கேன் டான்ஸ்) அதற்குச் சிறந்த உதாரணம்.
சமீபத்தில் வந்துள்ள ராஞ்சனா, லொட்டோரா, ராம் லீலா, இஷாக், ஆஷிக் 2 போன்ற படங்களின் வெற்றி இந்தி சினிமாவில் வழக்கமான சோகக் காதல் கதைகளுக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் கிளம்ப்பியுள்ளது. பலவிதமான ஆரோக்கியமான முயற்சிகளும் நடந்துள்ளன. சென்னை எக்ஸ்பிரஸ், புல்லட் ராஜா போன்ற முழுக்க முழுக்க வணிகமயமான சினிமாக்களும் வெற்றி பெற்றுள்ளன.
டாப் 5 படங்கள் : சென்னை எக்ஸ்பிரஸ், யே ஜவானி ஹை தீவானி, தூம் 3, க்ரிஷ் 3, ராம் லீலா
பேசப்பட்ட படம் : லஞ்ச் பாக்ஸ், ஷாஹீத், ஷிப் ஆப் தீஷியஸ், பாம்பே டாக்கீஸ், ஸ்பெஷம் 26
2013ம் ஆண்டின் நாயகர்கள் : தனுஷ் (ராஞ்சனா), இர்ஃபான் கான் (லஞ்ச் பாக்ஸ்), ராஜ் குமார் (ஷாஹீத்), ஃப்ர்கான் அக்தர் (பாக் மில்கா பாக்), ஆமீர்கான் (தூம் 3)
2013ம் ஆண்டின் நாயகிகள் : நிம்ரத் கவுர் (லஞ்ச் பாக்ஸ்), தீபிகா படுகோன் (ராம் லீலா), சோனாஷி சின்ஹா ( லொட்டோரா), ஷ்ரதா கபூர் ( ஆஷீக் 2)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment