Published : 17 Dec 2024 11:13 PM
Last Updated : 17 Dec 2024 11:13 PM

“மிகப்பெரிய ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன” - தனது அடுத்த படம் குறித்து அட்லீ சூசகம்!

மும்பை: “இன்னும் சில வாரங்களில் என்னுடைய புதிய படம் தொடங்க இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய ஆற்றல் தேவை என்றாலும் எங்களுக்கு நிறைய ஆசிர்வாதங்களும் தேவை. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மிகச்சிறந்த அறிவிப்புகள் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன” என்று இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேபி ஜான்’ திரைப்படம் வரும் டிச.25 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் அட்லீ “என்னுடைய ஆறாவது படத்துக்கு அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட கதையை எழுதி முடித்து விட்டோம். கடவுள் ஆசிர்வாதத்துடன் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். நடிகர்கள் தொடர்பான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். மிகப்பெரிய அளவில் உங்களை ஆச்சர்யப்படுத்துவேன். நீங்கள் முன்பே நிறைய விஷயங்களை ஊகம் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. நிச்சயமாக நாட்டுக்கு மிகவும் பெருமைக்குரிய படமாக அது இருக்கும்.

இன்னும் சில வாரங்களில் படம் தொடங்க இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய ஆற்றல் தேவை என்றாலும் எங்களுக்கு நிறைய ஆசிர்வாதங்களும் தேவை. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மிகச்சிறந்த அறிவிப்புகள் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன” என்று அட்லீ தெரிவித்தார்.

ஷாருக் கான் நடிப்பில் அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடி வசூலித்தது. இதனையடுத்து அட்லீ இயக்க உள்ள புதிய படத்தில் சல்மான் கான், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x