Published : 25 Jul 2024 07:50 PM
Last Updated : 25 Jul 2024 07:50 PM
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்டு பாரிஸில் உள்ள கிரெவின் அருங்காட்சியகம் கவுரவித்துள்ளது., மேலும், இந்த பெருமையைப் பெறும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு ‘பதான்’, ‘ஜவான்’, ‘டன்கி’ என மூன்று படங்கள் வெளியாகி ரூ.2500 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டின. அதளபாதாளத்தில் இருந்த பாலிவுட்டை ஷாருக்கானின் வருகை மீட்டு தந்தது. அடுத்து அவர் ‘கிங்’ என பெயரிடப்பட்டுள்ள பாலிவுட் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் ஷாருக்கானின் மகள் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளாக பாலிவுட்டில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் நடிகர் ஷாருக்கானுக்கு பாரிஸ் அருகாட்சியம் பெருமைப்படுத்தியுள்ளது. பாரிஸில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் ஷாருக்கானின் உருவம் பதியப்பட்ட சிறப்பு தங்க நாணயம் அவரது பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நடிகர் ஒருவருக்கு பாரிஸ் அருங்காட்சியகத்தில் நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், செக் குடியரசு, தாய்லாந்து, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் ஷாருக்கானின் உருவம் கொண்ட மெழுகு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு விழாவில் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT