Published : 17 Jul 2024 09:46 PM
Last Updated : 17 Jul 2024 09:46 PM

“இனியும் 30 வயதான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை” - நடிகை தபு பகிர்வு 

மும்பை: “இனிமேலும் என்னால் 30 வயது கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. என் வயதை ஒட்டிய கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை” என நடிகை தபு தெரிவித்துள்ளார்.

தபு - அஜய் தேவ்கன் நடிப்பில் ‘Auron Mein Kahan Dum Tha’ பாலிவுட் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தபுவின் இளமை கதாபாத்திரத்தில் சாய் மஞ்சரேகர் நடித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படம் குறித்து தபு அண்மையில் அளித்த பேட்டியில், “30 வயது பெண்ணாக நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் அதையெல்லாம் மறுத்துவிட்டேன். இனிமேலும் என்னால் 30 வயது கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. என் வயதை ஒட்டிய கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை” என்றார்.

மேலும், “படத்தில் உங்களின் இளம் வயது கதாபாத்திரத்தில் வேறொருவர் நடித்துள்ளாரே” என கேட்டதற்கு, “படத்தின் இயக்குநர் நீரஜ் பாண்டே என்னிடம் கதையை சொன்னதும், இளம் வயது கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்று தான் முதலில் கேட்டேன். அதற்கு அவர் வேறொரு நடிகை நடிக்கிறார் என்றதும், நான் ஓகே சொல்லிவிட்டேன். சில சமயங்களில் பார்வையாளர்களுக்கு திரையில் நடிக்கும் நடிகர்களின் உண்மையான வயது தெரியும்போது, நீங்கள் டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் அது வேடிக்கையாக இருக்கும். நாம் தற்போது எப்படியிருக்கிறோம் என்பதை பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் எல்லாமே படத்தையும், அதன் கன்டென்டையும் பொறுத்தது தான். சில படங்களில் வயதான நடிகர்கள் இளம் வயது கதாபாத்திரங்களில் சிறப்பாக பொருந்தியுள்ளனர். அது பார்வையாளர்களிடம் எந்த துருத்தலையும் ஏற்படுத்தவில்லை. எங்கள் படத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு அது தேவைப்படவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x