Published : 04 Jun 2024 02:23 PM
Last Updated : 04 Jun 2024 02:23 PM
மும்பை: கங்கனா ரனாவத் தொடங்கி ஹேமாமாலினி வரை திரையுலகைச் சேர்ந்த பலரும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் களம் கண்டனர். தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் வாக்கு எண்ணிக்கை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட 73,625 வாக்குகள் அதிகம் பெற்று 506603 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் கண்ட நடிகை ஹேமாமாலினி, காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தங்கரை விட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் கண்ட அருண் கோவில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுனிதா வர்மாவை விட கிட்டதட்ட 20ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார். இருப்பினும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இவர் ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் திரிச்சூரில் பாஜக சார்பில் களம் கண்ட நடிகர் சுரேஷ் கோபி கிட்டத்தட்ட 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் வி.எஸ்.சுனில் குமாரை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.
பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்காளத்தின் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் சுரேந்திரஜீத் சிங்கை விட 50 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். | ‘ஸ்டார்’ வேட்பாளர்களின் நிலவரம் குறித்து அறிய: > ஸ்டார் வேட்பாளர்கள் நிலவரம் @ தேர்தல் முடிவுகள் 2024 | இந்தியா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT