Published : 09 Mar 2024 07:00 PM
Last Updated : 09 Mar 2024 07:00 PM
சென்னை: அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மைதான்’ (Maidaan) பட ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படம் வரும் அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அமித் ஷர்மா. இவர் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள புதிய படம் ‘மைதான்’. கால்பந்து விளையாட்டை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் பிரியாமணி, கஜராஜ் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஃபுட்பால் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - பல்வேறு சவால்களை கடந்து கால்பந்து போட்டியில் சர்வதேச அளவில் முத்திரையை பதிக்கும் போராட்டத்தை களமாக கொண்ட படம் என்பதை காட்சிகள் உணர்த்துகின்றன. 1952-62 காலக்கட்டங்களில் நடக்கும் கதையில் இந்திய கால்பந்து அணியை சர்வதேச தரத்திலான அணியாக உருவாக்க அஜய் தேவ்கன் முயல்கிறார்.
அதற்காக எளிய பின்னணி கொண்ட விளையாடு வீரர்களை அணியில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். இந்த விளையாட்டில் இருக்கும் அரசியல், தடைகள், பிரச்சினகள் விறுவிறுப்பாக காட்டப்படுகின்றன. வரலாற்று பின்னணி கொண்ட எமோஷனல் ஸ்போர்ட்ஸ் டிராமாகவாக இப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT