Published : 29 Jan 2018 09:10 AM
Last Updated : 29 Jan 2018 09:10 AM

ஐபிஎல் ஏலம் ஏன் இப்படி இருக்கக் கூடாது?- ரிஷி கபூர்

ஐபிஎல் ஏலம் தொடர்பாக பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் டி20 2018-ம் ஆண்டுத் தொடருக்கான ஏலம் அண்மையில் நடந்து முடிந்தது. இதில், வீரர்களை கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து அணிகள் ஏலம் எடுத்தன.

இந்நிலையில், ஐபிஎல் ஏலம் குறித்து பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவனிக்கத்தக்க கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

அதில், "இந்த ஐபிஎல் ஏலம் தொடர்பாக எனக்கு ஒரு யோசனை. ஏன் பெண் வீராங்கனைகளையும்  ஏலத்தில் எடுக்கக்கூடாது. பாலின பாகுபாடு தேவையில்லையே. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்து தேர்தெடுக்கும் 11 பேரில் வீரர், வீராங்கனைகளை சேர்ந்தே இடம் பெறச் செய்யலாமே. ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கும் பெண்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆண்கள் மட்டும் என்ன கடினமான விளையாட்டா விளையாடுகிறார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ரிஷி கபூர் பதிவு செய்துள்ள இந்த ட்வீட் கவனம் பெற்றுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x