Published : 10 Sep 2023 05:22 AM
Last Updated : 10 Sep 2023 05:22 AM
சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் சார்பில் அட்லீயின் மனைவி ப்ரியா தயாரிக்கிறார். காளீஸ் இயக்குகிறார். இவர் ஜீவா நடித்த ‘கீ’படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
இந்நிலையில் இதன் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது நடிகர் வருண் தவண் காயமடைந்துள்ளார். இதை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “படப்பிடிப்பில் எனக்குக் காயம் ஏற்பட்டது. எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இப்போது இதைதான் செய்கிறேன்” என்று ஐஸ் தண்ணீரில் காலை வைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...