Published : 02 Sep 2023 01:13 PM
Last Updated : 02 Sep 2023 01:13 PM
மும்பை: சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘டைகர் 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் ‘ஏக் தா டைகர்’. 2012ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதில் இடம்பெற்ற சல்மான் கானின் ‘டைகர்’ கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதை வைத்து ‘டைகர் ஜிந்தா ஹே’ என்ற படம் 2017-ல் வெளியானது. இதனை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருந்தார். இதன் மூன்றாம் பாகமாக தற்போது ‘டைகர் 3’ உருவாகி வருகிறது. மணீஷ் சர்மா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘டைகர் ஜிந்தா ஹே’, ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘வார்’, ஷாருக்கானின் ‘பதான்’ ஆகிய படங்களில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சி என்று இப்படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸின் ஓர் அங்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான ‘பதான்’ படத்தில் சல்மான் கானின் ‘டைகர்’ கதாபாத்திரம் ஒரு காட்சியில் இடம்பெறும். அதேபோல இனி வரும் படங்களில் முந்தைய படங்களின் கதாபாத்திரங்கள் இடம்பெறலாம் என்று தெரிகிறது.
Aa raha hoon! #Tiger3 on Diwali 2023. Celebrate #Tiger3 with #YRF50 only at a big screen near you. Releasing in Hindi, Tamil and Telugu. #KatrinaKaif | #ManeeshSharma | @yrf pic.twitter.com/3bMBWyPVGm
— Salman Khan (@BeingSalmanKhan) September 2, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment