Published : 22 Aug 2023 10:50 AM
Last Updated : 22 Aug 2023 10:50 AM
ஆர்யா நடித்த ‘அறிந்தும் அறியாமலும்’, அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ஆர்யா நடித்த ‘சர்வம்’ உட்பட சில படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.
கடந்த 2021ம் ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடித்த ‘ஷெர்ஷா’ (Shershaah) என்ற இந்திப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இப்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் நாயகி. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இதையடுத்து அவர் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகிறது. கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் சல்மான் கான் ராணுவ அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
“கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி விக்ரம் பட்ராவின் வாழ்க்கை கதையை ‘ஷெர்ஷா’ படத்தில் விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், மீண்டும் அவர் ராணுவ அதிகாரி ஒருவரின் கதையை இயக்க உள்ளார். அதற்காக சல்மான் கான் தனது தோற்றத்தை மாற்ற இருக்கிறார். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment