Published : 12 Aug 2023 11:47 AM
Last Updated : 12 Aug 2023 11:47 AM

‘ஜவான்’ என்ன ஜானர் படம்?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான், ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ ஜவான் ஒரு எமோஷனல் டிராமா. இந்த ஜானரில்தான் படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் சிறப்பானது.

அவர் ஓர் அற்புதமான மனிதர் மற்றும் நடிகர். உண்மையில் அவருடைய நுட்பமான நடிப்பு நுணுக்கங்கள் மற்றும் அற்புதங்களைப் படத்தில் பார்க்க வேண்டும். மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தப் படம், பெண்களை எப்படி மதிக்க வேண்டும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது போன்ற வலுவான கருத்தையும் பேசியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x