Published : 06 Aug 2023 10:06 AM
Last Updated : 06 Aug 2023 10:06 AM
மும்பை: ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார் நடிகை இலியானா. இது குறித்த தகவலை சமூக வலைதளத்தில் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை இலியானா. தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானார். விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
பேறுகால படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இருந்த போதும் தனது காதலன் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. “நான் உடையத் தொடங்கும் போது அவர் என்னை தாங்கிப் பிடித்தார். இந்த அன்பான மனிதர் தான் எனக்கு உறுதுணையாக உள்ளார்” என்று மட்டும் இலியானா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தனக்கு மகன் பிறந்ததாக இன்ஸ்டாகிராம் பதிவில் இலியானா தெரிவித்துள்ளார். அந்த பதிவில் இனிதாக துயில் கொண்டுள்ள தனது மகனின் படத்தை பகிர்ந்துள்ளார். ‘Koa Phoenix Dola’ என தனது மகனுக்கு பெயர் சூட்டியுள்ளார். “எங்கள் அன்பு மகனை பூவுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என இலியானா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...