Published : 01 Jul 2023 02:56 PM
Last Updated : 01 Jul 2023 02:56 PM

ஷாருக்கானின் ‘ஜவான்’ ஆடியோ உரிமை ரூ.36 கோடிக்கு விற்பனை

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ரூ.36 கோடிக்கு டி-சிரீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரீஸ் நிறுவனம் ரூ.36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x