Published : 28 Jun 2023 11:49 AM
Last Updated : 28 Jun 2023 11:49 AM

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அசின்

மும்பை: தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்யப் போவதாக பரவிய வதந்திகளுக்கு நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவி நடித்த ‘எம்.குமரன் s/o மகாலட்சுமி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா,விக்ரம் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் பல ஹிட் படங்களில் அசின் நடித்திருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு, மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை மணந்தபிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்கள் உட்பட தனது கணவர் ராகுல் சர்மாவின் புகைப்படங்கள் அனைத்தையும் அசின் நீக்கினார். இதனைத் தொடர்ந்து தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக விரைவில் அவரை அசின் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்த நிலையில், தற்போது இந்த வதந்திகளுக்கு அசின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முற்றுப் புள்ளி வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இப்போது எங்கள் கோடை விடுமுறையின் நடுவே, ஒருவருக்கு அருகில் ஒருவர் அமர்ந்தபடி, எங்களுக்டைய காலை உணவை ரசித்துக் கொண்டே இந்த கற்பனையான மற்றும் அடிப்படையற்ற செய்தியை படித்துக் கொண்டிருக்கிறோம். இது நாங்கள் எங்கள் குடும்பத்துடன் அமர்ந்து எங்கள் திருமணம் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்கு ‘பிரேக் அப்’ ஆகிவிட்டதாக வந்த செய்தியை நினைவூட்டுகிறது. ஓர் அற்புதமான விடுமுறையின் 5 நிமிடத்தை இதில் வீணடித்தது வருத்தமாக உள்ளது. உங்கள் நாள் சிறப்பானதாக அமையட்டும். இவ்வாறு அசின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x