Published : 19 Jun 2023 06:21 AM
Last Updated : 19 Jun 2023 06:21 AM
மும்பை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில், நயன்தாரா, விஜய் சேதுபதி , பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் செப்.7-ம்தேதி வெளியாகிறது. இந்நிலையில் இதில் பாடகியும் நடிகையுமான சஞ்சிதா பட்டாச்சாரியா இணைந்துள்ளார். இவர், ‘ஃபீல்ஸ் லைக் இஷ்க்’, ‘தி புரோக்கன் நியூஸ்’ அகிய வெப் தொடர்களில் நடித்தவர்.
‘ஜவானி’ல் நடித்துள்ளது பற்றி சஞ்சிதா பட்டாச்சாரியா கூறும்போது, “இதில் என் கேரக்டர் பற்றி விவரிக்க முடியாது. ஆனால் ஷாருக்கானுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் சினிமா அறிமுகம் ஷாருக்கான் படத்தில் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. நான் பாடகி என்று முதல் நாள் தெரிந்ததும் மறுநாள் படப்பிடிப்புக்குப் போனபோது எனக்காக மைக்கும் கிதாரும் கொண்டு வர ஏற்பாடு செய்தார் ஷாருக்கான். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அங்கிருந்த நடிகர்களின் முன் நான் பாடினேன். அது புது அனுபவமாக இருந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT