Published : 28 May 2023 01:23 PM
Last Updated : 28 May 2023 01:23 PM
அபுதாபி: சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரிடம் வழங்கினார்.
ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இந்த விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிசேக் பச்சன் இருவரும் தொகுத்து வழங்கினர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான, சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச IIFA சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கமல்ஹாசனுக்கு இந்த விருதை வழங்கினார். அப்போது சல்மான் கான் உட்பட அனைவரும் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டி கமல்ஹாசனை உற்சாகமூட்டினர்.
Iconic, Visionary, Unstoppable!#KamalHaasan's indomitable talent shines bright as he wins the IIFA trophy for "Outstanding Achievement in Indian Cinema.''#IIFA2023 #IIFAONYAS #YasIsland #InAbuDhabi #NEXA #CreateInspire #SobhaRealty #EaseMyTrip@yasisland @VisitAbuDhabi pic.twitter.com/BvGwBJPhFr
— IIFA (@IIFA) May 27, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT