Published : 21 May 2023 03:39 PM
Last Updated : 21 May 2023 03:39 PM

20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்கும் யுவன்

சென்னை: விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் விஜய் - யுவன் கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். அட்லி, தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

2003ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ படம் தான் யுவன் இசையமைத்த ஒரே விஜய் படம். இந்த படம் தோல்வியை தழுவினாலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. அதன் பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கவில்லை. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இருவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x