Published : 30 Apr 2023 03:23 PM
Last Updated : 30 Apr 2023 03:23 PM
“பெண்களின் உடல் மிகவும் மதிப்புமிக்கது என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்கள் எந்த அளவிற்கு அதனை மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது” என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி நடிகர் சல்மான் கானின் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) படம் வெளியானது. இப்படத்தின் நடிகை பலக் திவாரி பேட்டி ஒன்றில், ‘‘சல்மான்கானின் படபிடிப்பு தளங்களில் பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்படும். ‘வி’ ஷேப் கழுத்துப் பட்டையிலான ஆடைகளை அணிந்து பெண்கள் படப்பிடிப்பு தளங்களுக்கு வரக்கூடாது. நல்ல பெண்களைப்போல உடல் முழுவதும் மறைக்கப்பட்ட ஆடைகளை அணியவேண்டும் என சல்மான்கான் சொல்வார். மேலும் எல்லா பெண்களும் முறையான ட்ரெஸ் கோடை பின்பற்ற வேண்டும் என்பது சல்மானின் விருப்பம்” என்றார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு சல்மான் கான் அளித்த பேட்டியில், “நீங்கள் ஒரு கண்ணியமான படத்தை எடுத்தால், எல்லோரும் அதை குடும்பத்துடன் பார்க்கச் செல்கிறார்கள். பெண்களின் உடல் மிகவும் மதிப்புமிக்கது என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்கள் எந்த அளவிற்கு அதனை மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது. இங்கே பிரச்சினை ஆண்களிடம் தான் உள்ளதே தவிர, பெண்களிடமில்லை. மற்றவர்களின் தங்கை, தாய், மனைவியை ஆண்கள் பார்க்கும் விதம் எனக்கு சுத்தமாக பிடிக்காது. நான் படம் இயக்கினால் பெண்களை ஆண்கள் வெறித்து நோக்கும் காட்சிகளை வைக்கமாட்டேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT