Published : 29 Apr 2023 10:01 AM
Last Updated : 29 Apr 2023 10:01 AM

சல்மான் கானை இயக்குகிறார் விஷ்ணுவர்தன்!

சல்மான் கான், விஷ்ணுவர்தன்

இயக்குநர் விஷ்ணுவர்தன், ‘அறிந்தும் அறியாமலும்’, அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ஆர்யா நடித்த ‘சர்வம்’, கிருஷ்ணா நடித்த ‘யட்சன்’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ‘ஷெர்ஷா’ என்ற இந்திப் படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இப்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இதையடுத்து அவர் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x