Published : 22 Apr 2023 07:34 AM
Last Updated : 22 Apr 2023 07:34 AM

லப்பர் பந்து படத்தில் கிராமத்து கிரிக்கெட்!

லப்பர் பந்து போஸ்டர்

ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் படம், 'லப்பர் பந்து'. கனா, எஃப்ஐஆர் படங்களின் இணை இயக்குநர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் வசனகர்த்தா தமிழரசன் பச்சமுத்து இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கின்றனர். தேவதர்ஷினி, பால சரவணன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கூடுவாஞ்சேரியில் தொடங்கி இருக்கிறது.

கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x