கோப்புப்படம்
கோப்புப்படம்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி, மன்னன் போட்டி

Published on

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களுக்குப் போட்டி நடக்கிறது. தற்போது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும் செயலாளர் மன்னனும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு, அர்ச்சனா கல்பாத்தி, தமிழ்குமரன், கலைப்புலி சேகரன், ராஜேஷ்வரி வேந்தன், விடியல் ராஜூ போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு கமீலா நாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன், பி.எல்.தேனப்பன் போட்டியிடுகின்றனர்.

இணை செயலாளர் பதவிக்கு டேவிட் ராஜ், இசக்கிராஜா, ஜெமினி ராகவா, மணிகண்டன், சவுந்தர பாண்டியனும் பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், கணேஷ், ரவீந்தர் சந்திரசேகரன், சிங்காரவேலன் ஆகியோ ரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர 26 பேர் கொண்ட பொதுகுழுவிற்கு 77 பேர் போட்டியிடுகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in