Published : 31 Mar 2023 03:43 PM
Last Updated : 31 Mar 2023 03:43 PM
நானி நடித்துள்ள ‘தசரா’ திரைப்படம் முதல் நாள் இந்திய அளவில் ரூ.38 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் பான் இந்தியா முறையில் நேற்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியான படம் ‘தசரா’. கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, சாய்குமார், தீக் ஷெட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது.
ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், படம் முதல் நாள் இந்திய அளவில் ரூ.38 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
#Dasara emerges as the #1 MOVIE at the Indian Box Office with a gross of 38 CRORES+ on Day 1
- https://t.co/9H7Xp8jaoG#DhoomDhaamBlockbusterDasara
Natural Star @NameisNani @KeerthyOfficial @Dheekshiths @odela_srikanth @Music_Santhosh @Saregamasouth pic.twitter.com/tD2icNehv5— SLV Cinemas (@SLVCinemasOffl) March 31, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment