Published : 02 Mar 2023 05:25 AM
Last Updated : 02 Mar 2023 05:25 AM
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர், எம்கேடி என்றழைக்கப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர். இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ படம் 1944ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி 3 தீபாவளியை கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த அவர் 1959ம் ஆண்டு தனது 49-வது வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு நேற்று 114வது பிறந்தநாள்.
அதை முன்னிட்டு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார். புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். கடைசி ரீல் மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை படமாக்க இருப்பது பற்றி பார்த்திபனிடம் கேட்டபோது, “திரைக்கதை முடித்து வைத்திருக்கிறேன். பயோபிக் மற்றும் பீரியட் படங்களை சாதாரண பட்ஜெட்டில் எடுத்துவிட முடியாது. பெரிய பட்ஜெட்டில்தான் எடுக்க முடியும். அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பண்ணுவேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT