Published : 25 Feb 2023 02:48 PM
Last Updated : 25 Feb 2023 02:48 PM

‘வாத்தி’ 8 நாட்களில் ரூ.75 கோடி வசூல் - வெங்கி அட்லூரி தகவல்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் 8 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, “இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பும் படமாக ‘வாத்தி’ அமைந்துள்ளது மகிழ்ச்சி.

படம் கடந்த 8 நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதைவிட வேற என்ன வேண்டும்? தயாரிப்பாளர் இங்கு வரவில்லை. அவர் வசூலான பணத்தை எண்ணுவதில் மும்முரமாக உள்ளார். நடிகர் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x