Published : 27 Jan 2023 01:09 PM
Last Updated : 27 Jan 2023 01:09 PM
சென்னை: மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள முதல் தமிழ்ப் படத்தின் தலைப்பு ‘ எல்ஜிஎம் - லெட்ஸ் கெட் மேரிட்’ (Lets Get Married) என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் தவிர, அவர் சென்னையின் எஃப்.சி. கால்பந்து அணியின் உரிமை, ஓட்டல், உடற்பயிற்சிக் கூடம், இயற்கை விவசாயம் என பல்வேறு தொழில்களில் தோனி முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் திரைத்துறையிலும் தயாரிப்பாளராக கால் பதித்துள்ளார்.
அதன்படி அவர், 'தோனி என்டர்டெயின்மென்ட்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் தமிழ்ப் படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. ‘எல்ஜிஎம் - லெட்ஸ் கெட் மேரிட்’ (Lets Get Married) என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாணும், நாயகியாக ‘லவ் டுடே’புகழ் இவனாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, நதியாவும் நடிக்கின்றனர்.
We're super excited to share, Dhoni Entertainment's first production titled #LGM - #LetsGetMarried!
Title look motion poster out now! @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @HasijaVikas @Ramesharchi @o_viswajith @PradeepERagav pic.twitter.com/uG43T0dIfl— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT