Published : 27 Dec 2022 08:40 AM
Last Updated : 27 Dec 2022 08:40 AM

வெறும் 10 படங்களிலேயே கங்கனாவுக்கு பத்மஸ்ரீ - ஜெயசுதா விமர்சனம்

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஓடிடி தளம் ஒன்றுக்காக ‘அன்ஸ்டாப்பபள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைக் கூறி வருகின்றனர். இதில் நடிகை ஜெயசுதா கலந்துகொண்டார். அவர் தென்னிந்திய நடிகர், நடிகைகள் புறக்கணிக்கப்படுவது பற்றி கூறியதாவது: நடிகை கங்கனா ரனாவத்துக்கு சில வருடங்களுக்கு முன் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் சிறந்த நடிகை. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் வெறும் 10 படங்களில் நடித்த நிலையிலேயே அந்த விருதை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், தென்னிந்தியாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் பலர் மத்திய அரசால் அங்கீகரிக்க படவேயில்லை.

44 படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என என்று கின்னஸில் இடம்பிடித்திருக்கும் நடிகை விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. தென்னிந்திய சினிமாவை அரசு கண்டுகொள்வதில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதற்காக அதைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதல்ல, தகுந்த மரியாதையோடு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை ஜெயசுதா, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், கே.பாலசந்தர் இயக்கிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அரங்கேற்றம்’, ‘நான்அவனில்லை’, ‘அபூர்வராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘வாரிசு’ படத்தில் விஜய் அம்மாவாக நடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x