Published : 23 Dec 2022 07:23 PM
Last Updated : 23 Dec 2022 07:23 PM
‘‘மக்கள் நம்மை நம்புகிறார்கள். ஆனால், நம்மிடம் ஒற்றுமையில்லை’’ என்று பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’, ‘சிம்பா’, ‘சூர்யவன்ஷி’, போன்ற படங்களின் மூலம் பாலிவுட்டில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் ரோஹித் ஷெட்டி. தற்போது அவரது இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சர்க்கஸ்' (Cirkus). இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ரோஹித் ஷெட்டி பாலிவுட் திரையுலகம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “நாம் வலுவான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நம்மிடமிருக்கும் பலத்தை சரியாக உணராமல் இருக்கிறோம். நம்மால் நிறைய செய்ய முடியும். ஆனால் நாம் ஒருபோதும் ஒன்றுபடுவதில்லை.
மக்கள் நம்மை நேசிக்கிறார்கள். நம்மால் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த முடியும். சின்டிகேட்டாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் நம்மால் நிறையவே சாதிக்க முடியும். திரையரங்க வியாபாரத்தை பெருக்குவது குறித்தும், அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது குறித்தும் நாம் சிந்திப்பதில்லை.
150 கோடி மக்களில் 10 கோடி மக்களை கூட நம்மால் சென்றடைய முடிவதில்லை. உங்களைப் பற்றி யாராவது தவறாக பேசினால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். யாராவது சரியான விமர்சனத்தை முன்வைத்தால் அதை நான் காது கொடுத்து கேட்பேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT