Published : 22 Dec 2022 09:11 PM
Last Updated : 22 Dec 2022 09:11 PM

CIFF 2022 விருதுகள்: சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி; சிறந்த நடிகை - சாய் பல்லவி; சிறந்த படம் - கிடா

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்(ஐசிஏஎப்) சார்பில் சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இந்த விழாவில் சிறந்த தமிழ் படமாக ‘கிடா’ தேர்வு செய்யப்பட்டு ரூ.1லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. இதர விருதுகள்:

  • இரண்டாவது சிறந்த தமிழ் படம் - ‘கசட தபற’
  • சிறந்த நடுவர் விருது - ‘இரவின் நிழல்’
  • சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (‘மாமனிதன்’), பூ ராமு (கிடா)
  • சிறந்த நடிகை - சாய் பல்லவி (‘கார்கி’)
  • சிறந்த ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன் (‘இரவின் நிழல்’)
  • சிறந்த ஒலி அமைப்பு - பிஜே ரூபன் (‘நட்சத்திரம் நகர்கிறது’)
  • சிறந்த படத்தொகுப்பு - பிரேம் குமார் (‘பிகினிங்’)
  • சிறப்பு விருது - ‘ஆதார்’

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x