Published : 21 Dec 2022 03:49 PM
Last Updated : 21 Dec 2022 03:49 PM
லண்டனைத் தலைமையிடமாக கொண்டு வெளியாகும் ‘எம்பயர்’ இதழில் சர்வதேச அளவில் 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் அந்த இதழின் பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
லண்டனிலிருந்து வெளியாகும் ‘எம்பயர்’ மாத இதழ் சர்வதேச அளவில் அனைத்து காலக்கட்டத்திலும் போற்றப்படும் சிறந்த 50 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரதான நடிகர்களான மார்லன் பிராண்டோ, டாம் ஹாங்க்ஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட், டாம் குரூஸ், கிறிஸ்டியன் பேல், லியனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் இந்த இதழில் இந்தியாவிலிருந்து நடிகர் ஷாருக்கான் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது.
ஷாருக்கானின் பெயரை குறிப்பிட்டுள்ள ‘எம்பயர்’ இதழில், அவரின் திரையுலகில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களையும் மேற்கொள்காட்டியுள்ளது. அதன்படி, ‘தேவதாஸ்’ படத்தில் அவரின் தேவதாஸ் கதாபாத்திரத்தையும், ‘மை நேம் இஸ் கான்’ படத்தின் ரிஸ்வான் கான் பாத்திரத்தையும், ‘குச் குச் ஹோதா ஹை’ ராகுல் கண்ணா, ‘ஸ்வேட்ஸ்’ படத்தின் மோகன் பார்கவ் கதாபாத்திரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் அதில், “நான்கு தசாப்தங்களாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்” என புகழாரம் சூட்டியுள்ளது. தொடர்ந்து, ‘கரீஷ்மாவும் திறமையுமில்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. ஏறக்குறைய அனைத்து ஜானர்களிலும் நடித்திருக்கும் பொருத்திப் போகும் அவரால் செய்ய முடியாதது என எதுவுமில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பதான்’ படத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், ஷாருக்கானுக்கு கிடைத்திருக்கும் இந்த சர்வதேச அங்கீகாரம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Empire's list of the 50 greatest actors of all time – revealed! As celebrated in our brand new issue, and voted for by you.
READ NOW: https://t.co/zvvo1xpYhn pic.twitter.com/zE4jZmVMSj— Empire Magazine (@empiremagazine) December 19, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT