Last Updated : 17 Dec, 2022 08:09 PM

 

Published : 17 Dec 2022 08:09 PM
Last Updated : 17 Dec 2022 08:09 PM

CIFF 2022 | ‘சேஃப் பிளேஸ்’ முதல் ‘பார்ஸ்லி’ வரை: டிச.18-ல் என்ன படம் பார்க்கலாம்? - பரிந்துரைப் பட்டியல்

'பார்சிலெய்' டொமினிக்கன் மொழித் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி.

SafePlace (Sigurnomjesto) | Dir: Juraj Lerotic | Croatia | 2022 | 102' | WC - Santham 10.15 am: குரோஷியா போன்ற நாடுகளின் படங்களை திரைவிழா போன்ற வாய்ப்புகளில்தான் பெரும்பாலும் பார்க்கக் கிடைக்கும். இப்படமும் வாழ்வின் நம்பிக்கையை பேசும் ஒரு படம்தான். தனது சகோதரன் டாமீர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தனது சகோதரன் ரூனோவுக்கு தகவல் தருகிறான். அவனது தொலைபேசி அழைப்பை அடுத்து அவன் தங்கியிருக்கும் அடுக்ககம் ஒன்றுக்கு வேகமாக ஓடிச்செல்லும் ரூனா தரைத்தளத்திலுள்ள கதவு உள்பக்கம் தாழிடப்பட்டுள்ளதை அறிகிறான். கதவை உடைத்துக்கொண்டு அவனை காப்பாற்ற முற்படுகிறான். குற்றுயிரும் குலைஉயிரமாக உள்ள தனது சகோதரனைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான்.

தற்கொலைக்கான காரணம் தோல்விமனப்பான்மைதான். அங்குள்ள சமூக வாழ்க்கையின் சிஸ்டம் அவனுக்கு எந்தவித அனுதாபமும் காட்டவில்லை, உதவி செய்யவும் இல்லை என்ற விரக்தி அவனை தற்கொலை செய்துகொள்ள தூண்டியுள்து. ரத்தம் வெளியேறியுள்ளதால் அவனை உடனடியாக காப்பாற்றியாக வேண்டும் என்ற உந்துதல் அவனைச் சூழ்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது. 24 மணிநேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பதட்டத்தை இயக்குநரும் சகோதரனை காப்பாற்ற போராடும் ரூனோவாக நடித்துள்ளவருமான நமக்கு ஏற்படுத்திவிடுகிறார்.

சுவிட்சர்லாந்து சர்வதேச திரைவிழாவில் சிறந்த முதல் படம், சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த நடிகருக்கான விருதையும் ஒருசேர தனது முதல் திரையிடலிலேயே அள்ளிவந்துவிட்டார் இயக்குநர் ஜூராஜ் லெரோடிக். இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுக்காக குரோஷியா நாட்டின் சார்பில் 'சேப் பிளேஸ்' பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Parsley (Parsley) | Dir: Jose Maria Cabral | Dominican Republic | 2022 | 83' | WC - Santham | 12.30 pm: வெவ்வேறு காலங்களில் உலகம் முழுவதுமே இனப்படுகொலைகள் நடந்துள்ளதற்கு மற்றுமொரு சாட்சியாக வந்துள்ள படம் 'பார்ஸ்லி' எனும் டொமினிக் நாட்டுத் திரைப்படம். டொமினிகன்-ஹைட்டியன் எல்லையில் 20 ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலையை நினைவுபடுத்துகிறது இப்படம். தனது எதேச்சதிகாரத்தை நிலைநாட்ட டொமினிகன் குடியரசில் 1937களில் கறுப்பின ஹைட்டியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிடுகிறார் கொடூரமான மற்றும் இனவெறி சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜிலோ. அதற்கு அவன் கூறும் காரணம் நம்மை பதைபதைக்க வைக்கக் கூடியது. அதாவது கரீபியன் தீவான ஹிஸ்பானியோலாவை ஹைட்டியுடன் இணைத்துக்கொண்டு தனது நாடு முழுவதும் 'வெள்ளைப்படுத்துதல்' செய்யப் போவதாகக் கூறி 20 ஆயிரம் கறுப்பினத்தவர்களைக் கொல்லத் துடிக்கிறார் அந்த சர்வாதிகாரி. ஹெய்டியன்-டொமினிகன்களைக் கொல்லவும் உத்தரவிடுகிறார்.

இதனால் ஆயிரக்கணக்கான கறுப்பின குடும்பங்கள் பலியாகின்றன. டொமினிகன் குடியரசில் கறுப்பின ஹைட்டியர்களின் படுகொலையில் சிக்கிப் பிரிந்த ஒரு குடும்பத்தின் தத்தளிப்பிலிருந்து தான் மொத்த கதையும் நகர்கிறது. ஒரு கர்ப்பிணி தனது வயிற்றில் ஒரு குழந்தையோடு கடைசி வரை போராடுகிறாள். இப்படத்தைப் பற்றி இயக்குநர் "இந்த மனித அவலத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்கிறார்.

இயக்குநர் கப்ரால் தனது இந்தப் படம் பொருத்தமான ஒரு தருணத்தில் வருவதையும் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். அதாவது, சமீப ஆண்டுகளில் டொமினிகன் குடியரசு ஒரு தவறான காரியத்தில் ஈடுபட்டது. நாட்டில் உள்ள ஹைட்டியர்களை இலக்காகக் கொண்ட சட்டங்களை இயற்றின. ஹைட்டி எல்லையில் ஒரு மதில்சுவரைக் கட்டுவதன் மூலமாகவோ மில்லியன் கணக்கான ஹைட்டி-டொமினிகன்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தம் உள்ளிட்ட பலவகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோ பக்காவான இனவெறி என்றே பரவலாகக் கருதப்படுகின்றன "மேலும் இந்தப் படம் இனவெறி மற்றும் இனவெறியின் திகிலைப் பார்க்க வைக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் இயக்குநர் ஜோஸ் மரியா கார்பெல்.

Somewhere over the Chemtrails (Kdyby radsi horelo) | Dir: Adam Rybansky | Czhech Republic | 2022 | 85' | WC - 6 Degrees 9.15 am: செக் குடியரசின் சிறிய நகரம் ஒன்றின் உள்ளூர் நண்பர்கள் பற்றிய படு நகைச்சுவையான கதை. அலுப்பைப் போக்கு குடித்து விளையாட்டாக கதைபேசி பொழுதுபோக்கும் அவர்கள் ஈஸ்டரின்போது ஒன்று கூடுகிறார்கள். அப்போது எங்கிருந்தோ வந்த வேன் ஒன்று அங்கு சதுக்கத்தின் மையத்திலிருக்கும் நீரூற்றின் மீது மோதி விடுகிறது. இதைப்பார்த்து உள்ளூர் நண்பர்கள் அலறியடித்து ஓடிவர டிரைவர் தப்பித்து ஓடிவிடுகிறார். பிறகு அவர் குடிபோதையில் ஏதோ தெரியாமல் செய்துவிட்டதாக தெரியவருகிறது.

ஆனல் உள்ளூரில் இருக்கும் பலரும் இது பயங்கரவாத சதித் தாக்குதல்தான் என்று அச்சமடைகிறார்கள். இந்த நிகழ்வுதான் படத்தின் அடிப்படை. ஏனெனில் இதையொட்டிதான் மக்களின் அச்சம் விசுவரூமெடுக்கிறது. மறுநாள் ஈஸ்டர் பண்டிகை ரத்து செய்கிறர்கள். எல்லோர் முகத்திலும் அச்சம். விபத்துக்கான காரணம் வெளிநாட்டு அச்சுறுத்தல் அல்ல என்று சான்றுகள் நிரூபிக்கப்பட்டாலும், இதை நம்பாமல் ஒருவருக்கு ஒருவர் சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.

உள்ளூர் மக்கள் இன்னமும் எவ்வாறு பழமைவாதப் போக்கில் சிக்கியுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டி மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவிவரும் தேசியவாதப் போக்குகளை பகடி செய்கிறது. செக் திரைப்படம். செக் நாட்டின் படங்கள் பெரும்பாலும் புதிய அலை யதார்த்தவாதப் படங்கள் ஆகும். அரசியல் நையாண்டியாகவும் மக்கள் கூடி வாழ்வதில் உள்ள மகிச்சி ஆரவாரங்களும் அரசியலைப்பற்றிய கேலி கிண்டல்கள் சற்று தூக்கலாகவே இருக்கும்.

அபத்த நகைச்சுவையுடன் கூடிய 'சம்வேர் ஓவர் தி கெம்ட்ரெயில்ஸ்' சிறந்த நடிகர்களின் தேர்வின் காரணமாக சிரித்து மகிழ்ந்து ரசிக்கக் கூடிய திரைப்படமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் மேடேஜ் பினோஸின் அழகான ஒளிப்பதிவு செக் நாட்டுப்புறத்தின் நிலக்காட்சிகள் நகரக் காட்சிகளில் பரந்துவிரிந்த அளவில் படம்பிடித்து தந்துள்ளது பெரிய பலம்.

Brother & Sister (Frere et soeur) Dir: Arnaud Desplechin France 2022 108' WC - Anna Cinemas 3.00 PM: பிரெஞ்சு குடும்ப நாடகம் என்றாலும் பண்பட்ட நடிகர்களின் உணர்ச்சி பிரவாகத்தால் நல்லதொரு திரைப்படமாக மேம்பட்டு நிற்கிறது. அண்ணன் தங்கை இருவரும் 20 ஆண்டுகளாக பேசிக்கொள்வதில்லை. ஆனால் தொழில்முறையில் இருவரது பின்னணியுடனான மனிதர்களும் மறைமுக மோதலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் உறவு காலப்போக்கில் கருத்து மோதல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

இருப்பினும், அவர்களின் பெற்றோர்கள் ஒரு சோகமான போக்குவரத்து விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, ​​இரண்டு உடன்பிறப்புகளும் தாங்கள் நீண்ட காலமாக சுமந்து வந்த மவுனப் போராட்டத்தை உடைத்து நேருக்குநேராக விவாதித்துக்கொள்கின்றனர். மனித உறவுகளின் சிக்கல்களை இத்திரைப்படம் நெருக்கமான உறவுகளிலிருந்தே பேசுகிறது. 2022 கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகத் திரையிடப்பட்டது, அங்கு அது பால்ம் டி'ஓருக்குப் போட்டியிட்டது.

சகோதரியாக நடித்துள்ளவர் புகழ்பெற்ற நடிகை மரியன் காட்டிலார்டு. ஆஸ்கர், கோல்டன் குளோப் என தனது நடிப்பாற்றலுக்காக உலகின் உயரிய விருதுகளை வென்றவர். இப்படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x