Published : 14 Dec 2022 10:05 AM
Last Updated : 14 Dec 2022 10:05 AM
கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி பாராட்டையும் வசூலையும் குவித்த படம் ‘அவதார்'. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்தப் படத்தின் அடுத்த பாகம், ‘அவதார்-தி வே ஆஃப் வாட்டர்' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 16-ம் தேதி, 160 மொழிகளில் ரிலீசாகிறது.
இதன் பிரீமியர் காட்சி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. ஜேம்ஸ் கேமரூனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தனது சொந்தப் படத்தின் பிரீமியர் ஷோவில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
இதுபற்றி அவர், “டோக்கியோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்பினேன். விமானத்தில் கரோனா தொற்றிக்கொண்டது. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். ‘பிரீமியரில் சந்திக்கலாம்’ என்று கடந்த ஒரு வருடமாக பலரிடம் கூறியிருந்தேன். இயலாமல் போய்விட்டது. மனிதன் ஒன்றை நினைக்க, கடவுள் வேறொன்றை நினைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT