Published : 14 Dec 2022 12:50 AM
Last Updated : 14 Dec 2022 12:50 AM
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்து அசத்தியுள்ளது. இதற்கான பாராட்டுக்களில் திளைத்து வருகிறார் ராஜமவுலி.
இதனிடையே, ஃபிலிம் கம்பேனியன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜமவுலி, இந்தி படங்களின் தோல்வி குறித்து பேசினார். அதில், “இந்தி சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்ததும், நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அதிக சம்பளம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற பசி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன.
ஆனால் முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின. பார்வையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு இயங்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையென்றால் மூழ்கிவிடுவார்கள்" என்று ஓப்பனாக பேசியுள்ளார் ராஜமவுலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT