Published : 10 Dec 2022 06:13 PM
Last Updated : 10 Dec 2022 06:13 PM

கார்த்தி இல்லாமல் ஜப்பான் ஷூட்டிங்

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கும் படம் ‘ஜப்பான்’. கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருடைய 25-வது படமான இதில், அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு, தூத்துக்குடி அருகே நடந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த ஷெட்யூலில் கார்த்தி இல்லாத காட்சிகளை படமாக்க இருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x