Published : 22 Nov 2022 09:02 PM
Last Updated : 22 Nov 2022 09:02 PM

ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் சுதா கொங்கரா?

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் சுதா கொங்கரா திரைப்படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2020-ம் ஆண்டு சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’. ஊர்வசி, கருணாஸ், மோகன் பாபு, விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

மேலும், சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என்றப் பிரிவுகளில், இந்தப் படம் 5 தேசிய விருதுகளைப் பெற்று அசத்தியது. இந்தப் படம் அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி ரீமேக்கைத்தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா அடுத்ததாக பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படம் ஒன்றை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட கதை ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் ஆகிய இருவருரில் ஒருவர் ரத்தன் டாடா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x