Published : 10 Nov 2022 10:16 PM
Last Updated : 10 Nov 2022 10:16 PM
தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி. இதனை தனது பிறந்த நாளான இன்று (நவ.10) அவர் வெளியிட்டுள்ளார். இந்த புதிய படம் வரும் 2023, ஆகஸ்ட் 15 அன்று தமிழ் உட்பட 11 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 11-ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம். 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியிருந்தது இந்தத் திரைப்படம். மொத்தமாக 340 கோடி ரூபாயை இந்த படம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி.
“இந்தியா நடத்திய போரின் உண்மைக் கதை ‘தி வேசின் வார்’. அறிவியல் மற்றும் இந்திய மதிப்புகளின் மூலம் இதில் வெற்றி கிட்டியது. இந்த படம் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று 11 மொழிகளில் வெளியிடப்படும். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். அதோடு படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
For the first time ever an Indian film will release in 11 Indian languages. At @i_ambuddha & @AAArtsOfficial it’s our humble initiative to help integrate Indian film industry as one. #BharatKaApnaCinema pic.twitter.com/AZKnPGiskn
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) November 10, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT