Published : 31 Oct 2022 07:29 PM
Last Updated : 31 Oct 2022 07:29 PM
கவுரவ டாக்டர் பட்டம் பெறும் இசையமைப்பாளர் டி.இமான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இமான், விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் இசையமைத்தாலும், 2010ம் ஆண்டு ‘மைனா’ திரைப்படம் மூலமாக மிகவும் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து ‘கும்கி’, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜில்லா’, ‘ரஜினி முருகன்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவர் ‘விஸ்வாசம்’ படத்துக்கான தேசிய விருதினையும் பெற்றார். மேலும் தமிழக அரசின் விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இசைத் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் (இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது) சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதில் மகிழ்ச்சி. அனைவரின் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
Glad to receive the Honorary Doctorate from the International Anti Corruption and Human Rights Council (Recognised by Government of India) in the field of Musical Arts!
Honoured by this gesture!
Thanks for all the love and wishes!
Praise God!
-D.Imman pic.twitter.com/5OjsohUZPi— D.IMMAN (@immancomposer) October 31, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT