Published : 29 Sep 2022 06:33 PM
Last Updated : 29 Sep 2022 06:33 PM
தனது சமீபத்திய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தனது ஊதியத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'விக்கி டோனர்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் ஆயுஷ்மான் குர்ரானா. 'அந்தாதூன்', 'பதாய் ஹோ', 'ஆர்டிக்கள் 15' உள்ளிட்ட படங்கள் அவருக்கு தனி அடையாளத்தை பெற்றுகொடுத்தது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தன. இதனால் படங்களின் அடுத்தடுத்த வெற்றிகளை கணக்கில் கொண்டு அவர் தனது ஊதியத்தை ரூ.25 கோடியாக உயர்த்தியதாக கூறப்படுகிறது.
இதனால், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த ஆயுஷ்மான் குர்ரானாவை நம்பி தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். ஆனால், கரோனா காலக்கட்டத்திற்கு பின் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. மாறாக அவை நஷ்டத்தை ஈட்டியதால் தனது ஊதியத்தை ரூ.25 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக ஆயுஷ்மான் குர்ரானா குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'சண்டிகர் கரே ஆஷிகி', 'அனேக்', படங்கள் போதிய வரவேற்பை பெறாத காரணத்தால் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா தனது ஊதியத்தை ரூ.25 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக குறைத்துள்ளார். அவரது வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் கடினமான காலங்களில் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட ஆயுஷ்மான் குர்ரானா இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT