ஷாருக்கானுடன் ஒப்பிடுவதா? - துல்கர் சல்மான் கோபம்

ஷாருக்கானுடன் ஒப்பிடுவதா? - துல்கர் சல்மான் கோபம்

Published on

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடித்து ஹிட்டான படம், ‘சீதா ராமம்’. இந்தப் படம் இந்தியிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் துல்கர் சல்மான் நடிப்பையும் ஷாருக்கான் நடித்து 2004ம் ஆண்டு வெளியான ‘வீர் ஜாரா’ படத்தையும் ஒப்பிட்டு பேச்சுகள் எழுந்தன.

இதுபற்றி துல்கர் சல்மான் கூறும்போது, ‘‘ஷாருக்கானின் நடிப்பை என்னுடன் ஒப்பிடுவது அவரை அவமதிக்கும் செயல். அவருடைய தாக்கம் என்னை அறியாமலேயே என்னிடம் இருக்கும். அவருடைய படங்கள் பார்த்துதான் நான் வளர்ந்தேன். நாம் எல்லோரும் பின்பற்றக் கூடிய பல நல்ல விஷயங்கள் அவரிடம் இருக்கின்றன. மக்களிடம் எப்படி பழகுகிறார், பெண்களிடம் எப்படி மரியாதையாக நடந்துகொள்கிறார் என்பதைப் பார்க்கும்போது அவர் ஒரு ஸ்பெஷல்தான். அவர் உத்வேகமாக இருந்து வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in