Published : 11 Sep 2022 05:37 PM
Last Updated : 11 Sep 2022 05:37 PM
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்று தன் பதவியை தக்கவைத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த முறையும் தற்போது தலைவராக உள்ள கே.பாக்யராஜ் மீண்டும் தலைவராக போட்டியிடுகிறார். எதிரணியில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இந்த தேர்தல் காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை, வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறுகிறது.
பாக்யராஜ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். துணைத் தலைவராக ஜி கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டி. செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், ரத்னகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களாக, பாபுகணேஷ், அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், ஹேமமாலினி, ஜெயப்பிரகாஷ், பட்டுகோட்டை பிரபாகர், ராஜா, ராஜா கார்த்திக், ராஜேஷ்வர், சேகர், வேல்முருகன், பா.விஜய் ஆகியோர் போட்டியிருகின்றனர்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான வசந்தம் எழுத்தாளர்கள் அணியில், தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிடுகிறார். துணைத் தலைவராக மனோபாலா, ரவிமரியா போட்டி. செயலாளர் பதவிக்கு மனோஜ்குமார், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு மதுரை தங்கம், பிரபாகர், ரங்கநாதன், சண்முகசுந்தரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்களாக, யுரேகா, பேரரசு, பொன்ராம், ராதாரவி, சாய்ரமணி, சாந்தகுமார், சரண், ஷரவணன் சுப்பையா, சினேகன், சிங்கம்புலி, ஏ,வெங்கடேஷ், விவேகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 570 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், வாக்களிக்க 490க்கும் மேலானவர்களுக்கு வாக்களிக்க தகுதி உள்ளது. தற்போது தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாலர் உட்பட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மாலை 4மணியளிவில் வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் 192 வாக்குகள் பெற்று இயக்குநர் பாக்யராஜ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT